ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் இடையே இன்று(18) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறுவர் வறுமை மற்றும் போஷாக்கின்மையை கட்டுப்படுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க IMF பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அத்துடன், ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கும் நீடித்த கடன் வசதியின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று(18) ஆரம்பமானது.