மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.