மாகாண சபை முறைமையை ஏற்கமாட்டோம் எனும் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு, அதனை அகற்றுவதற்கான ஆணையைத் தந்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தவறான புரிதலைக் கொண்டுள்ளதோ என்று சந்தேகிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்து,
புதிய அரசியலமைப்பினூடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.