ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும்இ மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான தூதுக்குழுவினருக்கும்இ இலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்இ பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஊழலுக்கு எதிராக அதிக பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான தூதுக்குழுவினர்,

முன்னதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், சபாநாயகர் அசோக ரங்வல உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்த கலந்துரையாடியுள்ளனர்.