உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றினூடாக எதிர்காலத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட பின்னணி மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான தகவல்களை அறிந்து கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எண்ணாயிரத்து 711 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டது.