சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில், இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 15 வருட காலமாக ஏமாற்றப்பட்டு வரும் தங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதிப் பொறிமுறை அவசியமாகும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.