வேலை ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேலில் பணியாற்றும் 17 இலங்கையர்களை அந்த நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். விவசாயத் துறையில் பணிபுரிவதற்கான விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர்கள், வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் போது இஸ்ரேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு பணியாற்றும் வெளிநாட்டுத் பணியாளர்கள் தொடர்பில், இஸ்ரேலிய அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.

எனவே, தமது பணியுடன் தொடர்புடைய விசாவைத் தவிர வேறு ஒரு விசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டச் சூழல் அங்கு இல்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.