“Clean SriLanka” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், கலாநிதி அனுருத்த கமகே, கலாநிதி காமினி படுவிடகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக சமூகத்தை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் “Clean SriLanka” வேலைத் திட்டத்தை திட்டமிடல், நிர்வகித்தல், நடைமுறைப்படுத்தல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்து நிறைவு செய்ய இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.