இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் இணைந்து கொண்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது அமெரிக்காவின் நம்பிக்கை எனவும், அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனவும் தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செல்வாக்கு இன்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகசெயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்தார்.