கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்படி, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தல் மற்றும் சட்டவிரோத தடுத்து வைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் அவர் கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.