முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போதே அவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.