முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.