இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமட்டா அக்கியோ திருகோணமலை -மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு நேற்று (20) விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை அவர் இதன்போது பார்வையிட்டார்.

அத்துடன் சம்பூரிலுள்ள ஏனைய 2 குளங்களையும் புனரமைப்பு செய்வதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று சம்பூர் கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டது.