குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் தலா 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேக நபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம்இ அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாஇ அவரது பிரத்தியேக செயலாளர் தம்மிகா ஷிராணி சுமனரத்ன, கனியவளகூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.அமரசேகர மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய அனுர செனவிரத்ன ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 6,146,000 ரூபாய் நிதியை பெற்று,

அதனை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.