யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் , வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் , கிளிநொச்சி 86/3 திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் சுந்தரலிங்கம் (முன்னாள் ஆசிரியர் – கிளி/வட்டக்கச்சி ம.வி, கிளி/வன்னேரிக்குளம் ம.வி) (உரிமையாளர் – ஶ்ரீ லிங்கா பொத்தகசாலை – கிளிநொச்சி , மல்லாவி, விசுவமடு , மாங்குளம் ஶ்ரீ லிங்கா அரிசி ஆலை – திருவையாறு) அவர்கள் 2025-01 -27 திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.
இவர் எமது கட்சியின் தொழிற்சங்கப் பிரிவுப் பொறுப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான தோழர் காண்டீபன் (சுந்தரலிங்கம் காண்டீபன்) அவர்களின் அன்புத் தந்தை ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
28.01.2025
இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் வியாழக்கிழமை 30.01.2025 காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெறவுள்ளது.
தொடர்புகட்கு: சு. காண்டீபன்
+94 (76) 380 6990