கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் பதவிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் அனைத்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளும், விசாரணைகளுக்காக அந்த குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் அந்தக் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.