சமூக மேம்பாட்டுக் கழகத்தின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் 03.02.2025 அன்று, அதன் தலைவர் த. சித்தார்த்தன், செயலாளர் ந. இராகவன், பொருளாளர் த. கதிர்காமநாதன் ஆகியோர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
கடந்த செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கிணங்க, அமைப்பிற்கான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நிதிப் பரிவர்த்தனைகளை அக் கணக்கின் ஊடாக மட்டும் முன்னெடுப்பதுடன் கணக்கின் விபரங்களை அமைப்பின் அங்கத்தினர்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஆதரவாளர்களுக்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.

அமைப்பின் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில், அமைப்பிற்கான முகப்புத்தக வலையமைப்பை உருவாக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அமைப்பின் பொதுச்சபைக்கு மேலும் உறுப்பினர்களை உள்வாங்குவதற்கும், 2025ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டத்தை அமைப்பு விதிகளின் பிரகாரம் பங்குனி மாதத்தின் முடிவுக்குள் நடாத்தவும், பொதுச்சபைக் கூட்டத்தில் தேவையான அமைப்பு விதி மாற்றங்களை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைப்பின் செயற்பாடுகளை சீரான முறையில் முன்கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
சமூக மேம்பாட்டுக் கழகத்தின் வங்கிக் கணக்கு விபரம் –
Community development council
1170 1001 2999 (current account)
Hatton National Bank, chunnakam branch
swiftcode – HBLILKLX
செயலாளர்
செயற்குழு சார்பாக
05.02.2025