வவுனியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு சீனத்தூரகத்தின் பிரதி பிரதானி தலைமையில் வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன். வடமாகாணத்தில் 2,470 குடும்பங்களுக்கு 1,490 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.