கல்கிசை காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், மூத்த காவல்துறை அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது கடமையிலிருந்த T-56 துப்பாக்கியை மூன்றாம் தரப்பினரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டதாகத் தெரியவந்துள்ளது.

இவர் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது