ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை தேவையில்லை என்றும்இ எனவே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்திருந்தார்.
அவர்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் பிரேம் ஆனந்த உதலாகமஇ கல்கிஸ்ஸ காவல்துறையின் குற்றப்பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி திஸ்ஸசிறி சுகதபால மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன நாணாயக்கார ஆகியோர் அடங்குவர்.
கடந்த சில நாட்களாகச் சட்டமா அதிபரின் அந்தக் கடிதம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்தன. அதனால் புதிய சாட்சியங்களை வெளிப்படுத்துவதன் அடிப்படையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதைப் பரிசீலிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை எனச் சட்டமா அதிபர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.