கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவை நேற்று (11)சந்தித்தார். இந்த சந்திப்பானது நீதியமைச்சில் நடைபெற்றது. இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், 26 ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதிக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இதனை நினைவு கூறும் வகையில் கடற்படைத் தளபதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு நினைவுப் பரிசினை வழங்கி வைத்தார்.