சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் கண்டறிவதற்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது. சுற்றாடலை பாதுகாப்பதற்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த வட்ஸ்அப் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
076 641 20 29 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப முடியும்.
அவ்வாறு கிடைக்கும் குறுஞ்செய்திகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி உடனடி மற்றும் நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் அவற்றை தொடர்ச்சியான செயன்முறையின் ஊடாக ஆய்வுகளுக்கு உட்படுத்தவும் எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சு கூறுகின்றது.
திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரையான இந்த வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை முன்வைக்க முடியும் எனவும் சுற்றாடல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.