தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்ல வளாகத்தில் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டது.

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்களது தலைமையில் தோழர்கள் மற்றும் நண்பர்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பமாக தோழர் ஆர்.ஆர் (வேலாயுதம் நல்லநாதர்) ஞாபகார்த்த இலவச குடிநீர்த் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோழர் ஆர்.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து குளிர்பானம் வழங்கிவைத்தல் ஆரம்பமானது.
நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சிவம், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தோழர்கள் சிவா,, சங்கர் மற்றும் தம்பி சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.