தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கிளிநொச்சி ஜெயந்திநகர், மகாதேவா சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது.
தோழர் பிறேம் (யாழ்ப்பாணம்) அவர்களது புதல்வன் தனுஜன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தார்.
 
 
 
 
 