ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்றுமுற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-
மேற்படி அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஓரே அணியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு அச்சின்னத்தில் போட்டியிடுவது.
மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக்குழுவை உருவாக்குவது.