கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொலை சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.