ஐக்கிய இராச்சியத்திற்கான நாடாளுமன்ற துணை செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸூடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டெர்க் மற்றும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் வார்சன் அகாகியன் உள்ளிட்ட பலரையும் வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3:30 இற்கு அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கருத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.