தண்ணீறூற்று முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் வரதப்பா (வைத்திலிங்கம் கணேசலிங்கம்) அவர்களின் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் இன்று (02.03.2025) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
02.03.2025