கொழும்பிலுள்ள முக்கியமான தேசியப் பாடசாலைகளில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிப்பதான கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக தரவுகளுடன் இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு மனோ கணேசன் முன்வைத்திருந்தார்.
இந்த விடயத்தில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தப் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமான வகுப்புகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
பல அதிபர்கள் ஒன்றிணைந்து தமிழ் வகுப்புகளைத் திட்டமிட்டுக் குறைப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.