T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

குறித்த இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.