கடந்த 22.02.2024 அன்று இயற்கையெய்திய, புளொட் அமைப்பின் சிரேஷ்ட உப தலைவரும், D.T.N.A இனது முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்.) அவர்களின் ஓராண்டு திதி நிகழ்வு இன்று 12.03.2025 புதன்கிழமை இணுவில் மஞ்சத்தடியில் அமைந்துள்ள அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்.) அவர்களின் சொந்த ஊரான சுழிபுரம் சிவன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் மற்றும் புண்ணியதானம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து இணுவில் மஞ்சத்தடியில் அமைந்துள்ள அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் சமய அனுட்டானங்கள் இடம்பெற்று தொடர்ந்து மதிய போசனமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் பொருளாளர் க. சிவநேசன், கட்சியின் துணைத் தலைவர் இரா. தயாபரன், தோழர் தீபன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அமரர் நல்லநாதர் (ஆர். ஆர் ) அவர்களின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.