தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏராளமான நிதி முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட கோப் குழு இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.