மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரளைப்பற்று வாழைச்சேனை, ஏறாவூர்பற்று செங்கலடி, ஏறாவூர் நகரசபை, மண்முனைப்பற்று ஆராயம்பதி, மண்முனை மேற்கு வவுணதீவு, எரிவில்பற்று களுவாஞ்சிக்குடி ஆகிய ஆறு சபைகளுக்கு வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தது. அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பட்டணமும் சூழலும், மாநகரசபை, குச்சவெளி, மூதூர், வெருகல் ஆகிய ஐந்து சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. அவற்றில் வெருகல் பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், காரைதீவு, திருக்கோவில் ஆகிய சபைகளுக்கான வேட்புமனுக்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்திருந்தது. அவற்றில் திருக்கோவில் பிரதேச சபைக்கான வேட்புமனு நிராரிக்கப்பட்டுள்ளது.