முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த தொகை கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.