முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்றையதினம் (29.03.2025) மல்லாவியில் நடைபெற்றது. எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன்,
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுஜிந்தன், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் போசன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் ரங்கா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்களும், கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
 
 