இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அனுராதபுரம் தொடருந்து நிலையத்தின் சமிக்ஞை அமைப்பை அவர் திறந்து வைத்தார். மேலும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை தொடருந்து பாதையையும் இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.