மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் மாத்தறை ரூனெயளர் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.