போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணத் தொகையை இணையவழி மூலம் செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கொடுப்பனவுகளை GovPay செயலி மூலம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
குருநாகலில் இருந்து அனுராதபுரம் செல்லும் வழியில் 11 இடங்களில் குறித்த திட்டத்தைச் செயற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு பொதுமக்கள் அனைத்து அரசாங்கக் கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் செலுத்த உதவும் வகையில் Govpay வசதி உட்பட மூன்று புதிய டிஜிட்டல் செயலிகள் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.