அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில் பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறித்த வீதி காலை 6 மணி முதல் மாலை 5 வரை மாத்திரம் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.