முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கில் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை கஞ்சிவாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் தையிட்டி போராட்டத்துடன் இணைந்ததாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
அந்தவகையில், மட்டக்களப்பு – சத்துருகொண்டான் பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டிருந்தது.