யாழ். வலிகாமம் வடக்கு ரூனெயளர் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், இவ்விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு விகாரையில் விசேட பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.