கொக்குத்தொடுவாயை பிறப்பிடமாகவும், நீராவிப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கிட்டினபிள்ளை சிவலிங்கம் அவர்கள் நேற்று (10-05-2025) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகிறோம். இவர் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) உறுப்பினரும், எமது கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் (கரிக்கட்டுமூலை தெற்கு) முன்னாள் உறுப்பினருமாவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு : அன்னாரின் இறுதிச்சடங்குகள் 13-5-2025 அன்னாரின் நீராவிப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகள் கற்பூரப்புல் இந்து மயானத்தில் இடம்பெறும்.