வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு ஏனைய தரப்புகள் ஆதரவளிக்கும் வகையிலான, உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எட்டப்படும் உடன்பாடானது உள்ளூராட்சி மன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.