 அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உத்தரவிடக்கோரி, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு ஏ.எச்.எம்.டி.நவாஸ், அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

உத்தேச சட்டமூலத்தினூடாக இலங்கை மின்சார சபையை தனியார்மயப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 
அத்துடன், சேவையாளர்களுக்கு நட்டஈட்டை செலுத்தி அவர்களின் சேவைகளை இறுதி செய்வது தொடர்பில் தெளிவான சரத்தொன்று குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களினூடாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், மனுதாரர்கள் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் வழக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.