அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இது தொடர்பில் உரையாற்றினார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் அதிகாரம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், பழைய அதிகாரத்துவ பொறிமுறையின் சில பகுதிகள் பழைய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடத் தவறிவிட்டன.
போலியான கடவுச்சீட்டுகளைத் தயாரித்த அதிகாரிகளுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பொருட்களை விடுவித்த அதிகாரிகளுக்கு எதிராக சுங்கத் துறையும் பல்வேறு விதிமீறல்களைச் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சுரங்கப் பணியகமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதனால்தான் பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறோம். நான் மீண்டும் கூறுகிறேன், மாறுங்கள், இல்லையெனில் நாம் மாற்றுவோம்.” என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.