மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸ் ஓய்வறையில் T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை (06) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இறந்தவர் ஹசலகாவைச் சேர்ந்த ஏ.எம். உபசேன அத்தநாயக்க (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
அந்த அதிகாரி சிறிது காலமாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவத்திற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.