நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டு இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அவர் சமீபத்தில் அந்த பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.