Header image alt text

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து, கல்லூண்டாய் பகுதி மக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் கழிவுகளை கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார். Read more

தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பேங்கொக்கில் (Bangkok) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தாய்லாந்து பிரதமர் ஆகியோர் சர்ச்சைக்குரிய விடயங்களை தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில், தாய்லாந்து இராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.

Read more

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளிக்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி பாடசாலை சமூகத்தினால் முன்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வு நடத்தப்பட்டது. எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தபோது.

Read more

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இன்று மூன்றாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது, இன்றைய தினம் மேலும் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, முதலாம் கட்ட அகழ்வு பணிகளின்போது, 19 மனித என்பு கூட்டுத் தொகுதிகளில் மீட்கப்பட்டிருந்தன.

Read more

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.  தகவல் அறிந்த அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அரச ஆவணங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Read more

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவை சேர்ந்த 33, 34 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் கடலோர காவல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இவர் (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால் பிரஜைகள் அதிகளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு வணிகத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Read more