கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, மட்டக்களப்பு – காந்தி பூங்கா வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. என் மௌனம் என் குற்றமல்ல, உன் செயல்தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more
கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பு நினைவகம் எனும் பெயரில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட பின்னர், அதற்கு பதிலாக இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. கனடா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 50-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு இன்று காலை விபத்திற்குள்ளானது.
கேள்வி :
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தி தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் கடற்படையின் சுழியோடல் பிரிவு மற்றும் கடலோர காவல்படையின் எண்ணெய் கசிவு மீட்புக் குழுக்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே விபத்து குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு இன்று விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுகளை நடத்தியதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான அனர்த்த நிவாரண கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 250,000 ரூபாவாக இருந்த அரச ஊழியர்களின் அனர்த்த நிவாரண கடன் தொகை 4 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாதுரு ஓயாவில் பெல் 212 ரக விமானம் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த இயலுமென பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று…
09.05.1985இல் வல்வெட்டித்துறையில் மரணித்த தோழர் சுகுணன் (சுப்பிரமணியம் சுவேந்திரன் – வல்வெட்டி) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….. கழகத்தின் ஆரம்ப அணியில் பயிற்சி பெற்ற இவர் , அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார். 1985.05.09ல் வல்வெட்டித்துறையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.