Header image alt text

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெகுனுவெலவின் உத்தரவுக்கமைய இன்று காலை இடம்பெற்றது. Read more

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட டீ அறிக்கையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் Online ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(09) முதல் ஆரம்பமாகின்றது. WWW.UGC.AC.LK எனும் இணையத்தள முகவரியின் ஊடாக இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. Read more

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான விமானத்தின் 2 விமானிகள் உள்ளிட்ட 12 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரொன்று இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. Read more

கொட்டாவை ரூனெயளர் மாலபல்ல விகாரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் உலக வங்கி குழுமத்தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் உலக வங்கி குழுமத்தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். Read more

மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மியன்மார் – தாய்லாந்து எல்லை ஊடாக பயணிப்பதற்கு தாய்லாந்தினால் அனுமதி வழங்கப்படாமையால் இவர்கள் மியன்மாரில் கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். Read more

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் உலக வங்கியின் தலைவர் இன்று(07) நாட்டிற்கு வருகை தந்தார். Read more

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வாவின் முன்னிலையில் இன்று(07) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் இன்று(07) மாலை கைது செய்யப்பட்டார்.